அறிவியலாய் ஆதிதமிழ்

கலித்தாழிசை

மதிக்கா நிலையில் எந்தமிழ்
ஏளனமாய் பார்க்கப் படும்போது - என்
குருதியில் சுருக்கென்று கோபம்
நெருப்பாய் பற்றவே வெடுக்கென்ற
வார்த்தையால் நடுக்கமுறவே செய்தேன்
எதிரியும் மயக்க முற்றே விழுந்தான் பயத்தால்.

கற்றோர் யாவரும் மற்றமொழியில்
உள்ள சிறந்த கருத்துக்களை
ஆற்றல் மிகுந்த தமிழிலே மாற்றம்
செய்தே நல்லதாய் ஏற்றங்காண
செய்து வித்தால் சான்றோர்கள் பலராய்
தமிழ்க் கற்றோர் உலகில் சிறப்பாய் பெருகுவரே.

தமிழால் வாழ்க்கை செழிக்காது
என்றுச் சொல்லியே மூத்தோர்கள்
நாற்றங்கால் பிள்ளைகளை வேற்று
மொழிகற்க தூண்டியே தூபமிட
அறிவின் நிலையோ கூழையாய்
பிள்ளைகளோ கல்வியை கற்பதிலும் சொள்ளையாய்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Apr-21, 10:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 167

மேலே