பொங்கிடுதே என்னுள்ளே போற்றுகிறேன் இனிதேயுனை - கலித்துறை

பொங்கிடுதே என்னுள்ளே போற்றுகிறேன் இனிதேயுனை!
கலித்துறை
(காய் 4 மாங்கனிச்சீர்)

தேனான நல்முத்தம் தேர்ந்தெனக்குத் தந்தாயே தெவிட்டாமலே;
கோனான என்மகனே கொவ்வையிதழ் பூப்போலக் குன்றாயிளம்
மானென்றே நீவந்தாய் மாற்றில்லாத் தங்கந்தான் மண்மீதினில்;
ஏனோ,சொல் பொங்கிடுதே என்னுள்ளே போற்றுகிறேன் இனிதேயுனை!

- வ.க.கன்னியப்பன்

எடுத்துக் காட்டு:

கலித்துறை
(காய் 4 மாங்கனிச்சீர்)

நாகாயு தந்தப்பி நரனுய்ந்த பொழுதத்து நாகக்கொடிச்
சேகான நெஞ்சத்த வன்சேனை யிற்றன்செ ருச்சேனையிற்
பாகார்க டாயானை நரபாலர் மகிழ்வோடு பரிவெய்தினா
ரேகாத சந்தன்னி லெக்கோளு நிகரென்ன விகலின்றியே 228

17 ஆம் போர்ச்சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-21, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே