ஏங்கி தவிக்கிறேன்
வண்ண நிலவே!
வட்ட மதியே!
வான் முகிலே!
வளைந்தாடும் நதியே!
புன்னகை பூவே!
மகரந்த இதழே!
விண்மீன் திரளே!
அமுதம் தரும் அணிலே!
இன்பம் தரும் மதுவே!
கள் வடியும் தேனே!
கனிந்திருக்கும் பழமே!
இசை பாடும் குயிலே!
பண் பாடும் மூங்கீலே!
உன்னை எண்ணி ஏங்கி தவிக்கிறேன்
இந்த மாலை வேளையில்!