கரை ஏற்றி விடு
விரியும் மலராய் விழிக்குள்
வந்தவளே!
கதிரும் மறைந்தது கண்மணி உன் நிழல் பார்த்து!
உயிரின் துடிப்பும் ஒய்ந்து
போனது உன்னை நோக்கிய நொடிப்பொழுதில்!
சதி என்ன செய்தாய் என தெரியவில்லையே!
கதி நீ என காத்து கிடக்கிறேன்!
காதல் கரைதனில் என்னை
ஏற்றி விடு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
