ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
அதிசயம் தான்
உண்பது பசும்புல்
தருவது வெண்மை பால்!
சத்தற்ற சக்கை
சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர்!
தாமதமாகவே வருகின்றது
எப்போதாவது உடன் வருகின்றது
தீயணைப்பு வண்டி!
தராதீர்கள்
பாவ மன்னிப்பு
மலிந்துவிட்டனர் பாவிகள்!
உதவியது
காதலருக்கு
உடைந்து நிற்கும் படகு!
உருவமில்லாதது
உயிரை நீட்டித்தது
காற்று!
பயணம்
ஓய்வின்றி
கடிகார முட்கள்!
வேகம் அதிகம்
உண்மையை விட
வதந்திக்கு!
தினமும் வரும்
காய் கிழவி வரவில்லை
கொரோனாவோ?
இரட்டிப்பு ஆசையில்
முதலுக்கும் மோசம்
தனியார் நிதி நிறுவனம்!
அத்தி பூத்த மாதிரி
அங்கொன்று இங்கொன்று
கூட்டுக் குடும்பம்!
பெருகி விட்டனர்
முதிர்கன்னிகள் மட்டுமல்ல
முதிர்காளைகளும்!
நிலநடுக்கம்
நடுங்கவில்லை மக்கள்
ஜப்பான்!
நல்ல இணையை
பிரித்து விடுகின்றனர்
சோதிடர்கள்!
புத்தங்ககளை விட
பஜ்ஜி சொஜ்ஜியே விற்கின்றன
புத்தகத் திருவிழா!
மாறுவேடப் போட்டியில்
வென்றான்
பிச்சைக்காரன்