எனக்கேன் இந்த கூற்றம்

கல்லில் சிலையாக கற்பனையில் தேவதையாக
சொல்லில் சிலவாக சொல்லாததில் பலவாக
அகத்தில் ஆராதிக்க ஆசையோடு நானிருக்க
புறத்தில் புன்னகை பூட்டி என்மனத்தில் ஆசைத்தீ மூட்டி...
என்னை ஏஙகவைத்து உன்னிலெனை தூங்கவைத்து

என்னவளே ! உன் கயல்விழி பார்வையில்
கண்டேன் மனதில் புதுச்சோலை
வாங்கி வரட்டுமா கூரைசீலை
தாங்கி தரவா தங்கத்தாலி

இன்னும்தான் ஏங்க வைப்பாயோ...அல்ல
கண்ணசைவில் காதல் சொல்வாயோ
பெண்ணாசை பொல்லாதது
மனதின் ஓசை அதனை வெல்லாது

கன்னியே உள்ளம்கவர் கள்ளியே
கணவனாக கைபிடிப்பாயா ... அல்ல
என்னை உன் நேரக்கடவுக்கு நேர்ந்துவிடுவாயா
என்னில் ஏனிந்த மாற்றம் எனக்கேன் இந்த கூற்றம்...

எழுதியவர் : பாளை பண்டி (5-May-21, 3:54 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 43

மேலே