மாமன் மகளே காதல் தென்றலே

யாப்பரும்கலம் காரிகை என்றான் அமிர்தசாகரன்
நாப்பழகும் தமிழ்ச்சொல்லில் காரிகையை வைத்தால்
பூப்பது எல்லாம் புதுப்புது கவிதையடி
தோப்பில் தென்னம்பூப் போல்சிரிக்கும்கா தல்கண்ணம்மா !

யாப்பரும்கலம் அவன்காரிகை
என்றனனுயர் அமிர்தசாகரன்
நாப்பழகிடும் தமிழ்ச்சொல்லினில்
காரிகைதனை வைத்துவிட்டிடின்
பூத்திடும்புதுப் புதுக்கவிதைகள்
என்னை
தோப்பில் தென்னம்பூ சிரிப்பில் பார்க்கும்
மாமன் மகளே காதல் தென்றலே !

கவிக்குறிப்பு :
--குறளடிகளில் கனிச்சீர்களும் வஞ்சித்தளையும் பெற்று
பின் தனிச் சொல் " என்னை"யும் பெற்று சுரிதக அடிகள்
இரண்டுடன் ஆசிரியப்பாவின் ஏகாரத்துடன் (தென்றலே )
நிறைவு பெற்ற வஞ்சிப்பா .
இலக்கணம் யாப்பார்வலர்களுக்கு மட்டுமே
மற்றவர்கள் புதுக்கவிதையென படித்துச் செல்லவும்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jun-21, 4:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே