குருதிநாள இராணுவ வீரர்கள்
ஒண்டியாய் செல்ல வேண்டும்
ஒண்டியபடி செல்ல வேண்டும்
ஒற்றையாடி பாதையில் தனித்தே
கெட்டி மனத்தோடு செல்ல வேண்டும்
குட்டி கரணமுடன் பாம்பு ஊர்தலுடனும்
உயிரை மதிக்காமல் துணிந்தே
பனியோ பள்ளமோ படுகுழியோ
பாதுகாப்பு சிறிதுடனே சடாரென
பாய வேண்டும் புலியைப் போல்
சாவு வருமென்றே துணிந்தபடியே
பாவத்திற்கு அஞ்சாமல் கொல்ல வேண்டும்
பழகியவர் வீழ்ந்து இறந்தாலும்
பார்க்காமல் பதறாமல் ஓட வேண்டும்
இவ்வேலை ஒரு பற்றுதலான பற்றற்றது
நாடு என்ற எண்ணமே மரமாய் வளர்ந்து மனதில்
மறவராய் எங்களை இயக்குகிறது
மகிழ்ந்து நிற்க உகந்த இடம் இல்லை இது
என்றாலும் நாட்டை மகிழ்வாய் வைக்க நாங்கள்
உறங்காமல் உழலுகிறோம் ஓய்வு பெறும் வரை
நாங்களே நாட்டின் குருதிநாள இராணுவ வீரர்கள்.
------நன்னாடன்