இதயத்தை தேடுகிறேன்

தேடுகிறேன் ..தேடுகிறேன்
தேடிக்கொண்டே ...
இருக்கிறேன்
தொலைந்து போன
என் இதயத்தை ...!!

எங்கே தேடுவது
யாரிடம் சொல்வது
ஒன்றும் புரியவில்லை
சற்று சிந்தித்தேன் ..!!

என் கனவு கன்னியே
உன்னை சந்தித்தபிறகுதான்
என் இதயம் காணவில்லை
என்பது தெளிவாக
புரிந்து விட்டது ..!!

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடத்தில் தேடி
அலைந்து விட்டேன் ..!!

இனிமேல் கவலையில்லை
இருக்க வேண்டிய இடத்தில்தான்
என் இதயம் இருக்கிறது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jun-21, 9:56 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1901

மேலே