சிறை

பெண்ணே !...
மனச்சிறைக்குள்
விலங்கிடப் பட்டால்
குழந்தையாவது கிடைக்கும்...

இன்றோ ...
மனம் சிதைந்து
விலங்கிடப் பட்டிருக்கிறாய்
குழந்தையாய்.

கனவுகள் பல
காண வேண்டிய
இளமைக்காலம்
இன்று...
களவாடப்பட்டு
கைதியாக்கியது
எதனால்?...

எதனால்?...
எதனால்?...
என்று கேட்டபோது...
காரணம் ...
"எத்தனால் "....என்று
அறியாமல்
போய்விட்டேன்...

வளரும் பருவத்தில்
மதுவில் (எத்தனால்)
மயங்கிய உன்னை ....
மதிமயக்க...
பெற்றோர் ....
கட்டி வைத்ததைப்
பார்த்து ....வருத்தமே
அடைகின்றேன்.

பிறரை
மயக்கும் உன் பருவம்...
இன்று...
நீயே மதுவுக்கு
மயங்கும் பருவத்தில்
உன்னை தள்ளியது
கொடுமையே.

(மீளமுடியாத சோகத்தில்
இன்று பல இளம்பெண்கள்... மதுவிற்கு
அடிமைப்பட்டு
வீட்டுக்காவலில் இருப்பது...எத்தனை பேர் அறிவர்).

மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (25-Jun-21, 5:37 am)
சேர்த்தது : PASALI
Tanglish : sirai
பார்வை : 34

மேலே