தூக்கம் எனும் சிறு மரணம்

உடல் இயங்குகிறது
மனம் தூங்குகிறது
ஒவ்வொரு இரவிலும் ....

உடலும், மனமும்
இயங்குகிறது
ஒவ்வொரு பகலிலும்...

ஒன்றை நிறுத்தி
ஒன்றை இயக்கும்...இறைவன்
இரண்டையும் நிறுத்த
தான் மட்டும் இயங்குகிறான்
மரணத்தில்.

அதனால்தான் ...
தூக்கத்தை
சிறு மரணம் என்று
விழிக்கின்றான்.

எழுதியவர் : PASALI (25-Jun-21, 5:39 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 30

மேலே