கடைவிழி சொல்லாமல் சொல்வது காதல்மொழி

பாவினம் :
மடலவிழ் பொழிலெழில் தாமரை மலர்முகம்
கடல்விரி எழில்நீல கயலசையும் கருவிழி
உடலொரு மலரசை மென்மலர் பூங்கொடி
கடைவிழி சொல்லாமல் சொல்வது காதல்மொழி

-----ஒரே எதுகை நாற்சீர் நாலடி ---இது கலிவிருத்தம்
பா :
மடலவிழ் நற்பொழில் தாமரைப் பூவே
கடல்விரி நீலம் எழில்மீன் விழிகள்
உடலொரு பூங்கொடி ஆடும் அழகில்
கடைவிழிசொல் லும்மொழிகா தல் !

-----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மடலவிழ் நற்பொழில் தாமரைப் பூவே
கடல்விரி நீலம் விழிமீன் - உடலோர்
படரெழில் பூங்கொடி ஆடும் அழகில்
கடைவிழிசொல் லும்மொழிகா தல் !

----ஒரு விகற்ப நேரிசை வெண்பா

கவிக்குறிப்பு :
யாப்பார்வலர்கள் கூர்ந்து கவனித்தால் மாற்றம் வெண்பா விதிகளுக்கு
ஏற்ப எப்படி அமைக்கப் பட்டிருக்கிறது என்பது புரிய வரும்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-21, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே