கலைந்த கனவு
பூ சூடும் கூந்தலிலே
மணம் கண்டு மதிமயங்க...
வேல் எறியும் விழியினிலே
காதல் கண்டு கண்மயங்க...
கால் வரையும் கோலமதிலே
நாணம் கண்டு சொல்மயங்க...
கை தீண்டும் அழகினிலே
சுகம் கண்டு மெய்மயங்க...
செந் தாமரை இதழினிலே
தேன் கண்டு நான்மயங்க...
என்னாச்சு?
விரல் சொடுக்கி வினவுகிறாள்
நறுமலர் நங்கை..!