விபத்து

ஒரு ஊரில் ராசப்பா ராமாயி என்னும் தம்பதியருக்கு குமரேசன் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு 10 வயது ஆகும் பொழுதே அவன் பெற்றோர்களாகிய ராசப்பாவும் ராமாயியும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டனர்.
குமரேசனை அவன் நண்பன் ஆறுமுகத்தின் பெற்றோர்களே வளர்த்து வந்தனர். குமரேசனும் நன்றாக கல்வி கற்றான். குமரேசன் எப்பொழுதும் அவன் நண்பர்கள் குமார், ராம், அசோக், செல்வம் மற்றும் ஆறுமுகம் அவர்களுடனே இருப்பான். பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து பின் பி.ஏ பி.எல் படிப்பை கல்லூரியில் பயின்று வந்தான். கல்லூரியில் படிக்கும்பொழுதே ரம்யா என்னும் பெண்ணை காதலித்து வந்தான். அவன் படிப்பை முடித்து ராஜசேகர் என்னும் வழக்கறிஞரிடம் புனை வழக்கறிஞராக இரண்டு வருடம் இருந்தான்.பின்பு வழக்கறிஞர் ஆனான். குமரேசன் உண்மையான நீதிக்காக மட்டுமே வழக்காடி வந்தான்.
ரம்யாவின் பெற்றோரிடம் சென்று ரம்யாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்டான். ரம்யாவின் பெற்றோர்கள் குமரேசனை ஏற்றுக்கொள்ளவில்லை. குமரேசன் நண்பர்களே பதிப்பாளர் அலுவலகத்தில் குமரேசனுக்கும் ரம்யாவுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். குமரேசனும் ரம்யாவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு மகள் பிறந்தாள்.
மகளுக்கு வெண்ணிலா எனும் பெயரை சூட்டினார்கள். வெண்ணிலாவும் பெயருக்கேற்றவாறு நிலாவை போன்ற அழகான முக தோற்றத்துடனும் புத்திசாலியாகவும் திகழ்ந்தாள்.
ஒரு நாள் காலைப் பொழுது விடிந்தது ரம்யா தன் மகள் வெண்ணிலாவை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது வெண்ணிலா தன் தந்தையிடம் தனக்குப் பொது அறிவு புத்தகம் வாங்கி தருமாறு கேட்டாள். குமரேசனும் வாங்கித் தருவதாக கூறி ரம்யா சமைத்த உணவையும் எடுத்துக்கொண்டு இருவரிடமும் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு பின் தன் நண்பன் அசோக்கின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இரவு சிறிது தாமதமாக வருவேன் என்று கூறி விடைபெற்றான்.
குமரேசன் நீதிமன்றத்திற்குச் சென்று பணி முடிந்தபின் நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றான். நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பிறந்த நாள் விழாவை கொண்டாடி னார்கள். பிறந்தநாள் விழாவின் போது அனைவரும் மது அருந்தினார்கள். பின் வீட்டுக்கு செல்லும்பொழுது எதிரே வரும் வாகனம் தெரியாமல் இவன் இரு சக்கர வண்டியை மோதியதால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான்.
இவன் இறந்த செய்தியை கேட்டு ரம்யாவும் வெண்ணிலாவும் துடிதுடித்துப் போனார்கள். இவன் பையில் பொது அறிவு புத்தகம் இருந்தது. அதைக்கண்டு வெண்ணிலா அப்பா அப்பா எனக்கு தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள். அவளை சமாதானம் செய்ய இயலவில்லை. ஒருவழியாக சமாளித்தார்கள்.
மாதங்கள் ஓடின. பின் ரம்யா ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து தன் மகள் வெண்ணிலாவை நன்றாக படிக்க வைத்தாள். வெண்ணிலா தன் கல்வியை முடித்துவிட்டு. வழக்கறிஞர் ஆனால். வழக்கறிஞராக அப்பாவைப் போலவே நேர்மையாக வாதாடினாள்.
கதையின் நீதி:
மனிதன் நல்லவன் ஆயினும் குடிப்பழக்கம் அவனை அழித்துவிடும். மது அருந்தும் சகோதரர்களே இனியாவது உங்கள் மதுப் பழக்கத்தை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக. குமரேசன் தன் வாழ்க்கை இழந்தது போல யாரும் இழக்க வேண்டாம்.

எழுதியவர் : மகேஸ்வரி (17-Jul-21, 5:28 pm)
Tanglish : vibathu
பார்வை : 185

மேலே