சம்பாரத் தோசை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காயமிள கிஞ்சி கருவேப் பிலைமுதலாந்
தூயபல காரமிட்ட தோசைக்கு - வாயுவிலை
பித்தகப வேகப் பெருக்கொழியுந் தாதுவுமாஞ்
சுத்தவன சத்திருவே சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

பெருங்காயம், மிளகு, இஞ்சி, கருவேப்பிலை இவற்றைச் சேர்த்த தோசையால் வாத தோடம், பித்தம், சிலேட்டுமம் நீங்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-21, 5:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே