சுதந்திரநாள் வைரவிழா

சுதந்திரம் வந்த போதென் வயது
ஒன்று மில்லை மாதம் எட்டு
ஐந்தா வதுபடிக கையில் மந்திரி
ஐயா காம ராசரால் சுபிட்சம்
ஏழாம் வகுப்புக் குப்பின் சம்பளம்
ஏதும் வேண்டாம் என்று நிறுத்தினார்
அதுவரை சுதந்திர கொண்டாட் டம்பார்
வளர வளர புரிந்தது சுதந்திர
சுகத்தை அனுபவிக் கப்பிறந் தாரும்
நாமில் லைப்பட் டியலார் என்றே
அறியா பருவத் திலெங்கள் பள்ளியில்
சுதந்திர் நாளில் பாரதிப்
பாட்டுடன் நாங்கள் பாடிய பாட் டிதே

பாடல்
பஜனை சத்தம் கேட்குதே
சாமி ஊர்வலம் வருகுதே
பப்பர பப்பர பப்பரபம்
சங்க நாதம் முழங்குதே
ஜல்லர ஜல்லர ஜல்லரஜல்
தாள சப்தம் கேக்குதே
டமர டமர டமரடம்
மத்தள சப்தம் கேக்குதே

ஜாதி சொல்ல சுதந்திர மில்லை
இந்து வென்றிட சுத்தந்திர மில்லை
சாமி கும்பிட சுதந்திர மில்லை
நல்ல கலாச்சா ரசட்டம் இல்லை
ஜாதி மதங்காக் கசட்ட மில்லை
சொந்தங் களாள இதுவா சுதந்திரம்
தந்தைக் குப்பின் தமையன் வாரிசு
இதுவா சுதந்திரம் பட்டா பிஷேகம்
கொரா னாவில் கூண்டோ டுமாற்றமாம்
கொடுப்பர் லஞ்சம் பெறவே மாற்றம்
அடுக்கிட நீளும் பட்டியல்
தடுக்கும் சுதந்திரம் யாருக் குமிலையே


அன்று தெரியா குதூகலித் தவர்நாம்
சுதந்திரம் சுகிக்கும் பட்டியல் எதிர்பதேன்
சுதந்திரம் நினைக்கா மறந்தான் இன்று
மதிக்கான் கருப்பு நாளாம் இன்று
சமத்துவம் வந்தால் நமக்கு சுதந்திரம்
என்ன கொடுமை மாலை தொடுத்து
குரங்கிடம் கொடுத்தார் என்செய
சுதந்திரம் நமக்கு எப்போ வருமோ

எழுதியவர் : பழனி ராஜன் (14-Aug-21, 6:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 85

மேலே