எது சுதந்திரம்

எது சுதந்திரம்??


இளைஞனே!
இணையத்தில்
இமைப்பொழுதும் விலகாமல் இருப்பதல்ல சுதந்திரம்!

இதயத்தால்
இல்லத்தாரோடு
இமைப்பொழுதும் விலகாமல்
இருத்தலே சுதந்திரம்!

இளைஞனே
சுதந்திரம் என்பது எது தெரியுமா?
கட்டுப்பாடின்றி
காற்றைப்போல் திரிவது!

காற்றைப்போல்
கண்டம் விட்டு கண்டம்
கடவு சீட்டு இல்லாமல்
பயணிப்பது!

இளைஞனே
நீ ஈன்றவர் யாருமே
இல்லாமல்
இருக்கலாம்
சாதி இல்லாமல்
இந்தியாவில் இருக்க முடியுமா?

காற்றைப் பார்
என்றாவது நான்
இன்ன சாதி என
சொல்லிக் கொண்டதுண்டா?

இளைஞனே!
எது சுதந்திரம்?
உன்ன உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
இவையெல்லாம் இருந்தால் தானே
சுதந்திரம்!

இதோ
இந்திய மக்கள்
விளைந்ததை கொடுத்துவிட்டு
நியாயவிலைக் கடைகளின் முன்னால்
நிற்கிறார்களே?

இளைஞனே!
நீ நினைத்ததை படிக்க
முடியுமா உன்னால்?
தகுதித்தேர்வை நீட்டி
தடை போடுவான்!
பணத்தை நீட்டு
என சட்டம் போடுவான்!
கல்வி சுதந்திரம் கிடைத்ததா உனக்கு?

ஆணுக்குப் பெண்
நிகர் என்பாய்
ஆனாலும் பெண்களை
போகப் பொருளாய் பார்ப்பாய்
பெண் சுதந்திரம் உண்டா இங்கு?

கடவுள் முன்
எல்லோரும் சமம் என்பாய்!
கருவறைக்குள்
சண்டாளர் கூடாது என்பாய்!
சமய சுதந்திரம் எங்கே இங்கு?

வயிறு பெருத்தவன்
மேலேயும்
வயிறு ஓட்டியவன்
வடக்கயிறு இழுப்பது மா சுதந்திரம்?
தகா பிண்ணங்கள்!

இங்கே
கற்சிலை வடித்தவனுக்கு
கடவுளின் அருகில் செல்ல
சுதந்திரம் இல்லை!

கடவுளான கற்சிலைக்கு
கன்னி தமிழில்
அர்ச்சனை செய்ய
சுதந்திரம் இல்லை!

சுதந்திரம் அடைந்த பின்பும்
சொந்த நாட்டில்
சொந்த மொழியில்
வழக்காட
வக்கில்லை!

தாழ்ந்த சாதியர்
கொடியேற்ற தடுப்பதா
சுதந்திரம்?

தாழ்ந்த சாதியர்
உயரத் தோள்
கொடுப்பதே சுதந்திரம்!

சட்டப்படி
தலைவராக தேர்ந்தெடுத்தபின்னும் தரையில்
அமரவைத்து அவமானப்படுத்துவதாக
சுதந்திரம்?

பெண் பிள்ளைகள்
காதலை ஏற்க மறுத்தால்
பண்பாடு மறந்து
அமிலத்தை அவருக்கு அளிப்பதா
சுதந்திரம்?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில்
தமிழ் பேசினால்
தண்டம் விதிப்பதா
சுதந்திரம்?

பொதுவெளியில்
காதலர் இருவர்
கட்டுப்பாடின்றி
சல்லாபம் புரிவதாக
சுதந்திரம்?

பொது சொத்துக்களை
போக்கிரி தனமாய்
அழிப்பதா சுதந்திரம்?

இளைஞனே!
இதுவெல்லாம்
சுதந்திரம் அல்ல
எல்லோரும் இன்புற்று வாழ
காற்றைப் போலவும்!
கானப் பறவை போலவும்!

நீரைப் போலவும்!
நீள வானை போலவும்!
கதிரை போலவும்!
கடலை போலவும்!!
வாழ்வதே சுதந்திரம்!

எழுதியவர் : புஷ்பா குமார் (20-Aug-21, 9:21 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : ethu suthanthiram
பார்வை : 143

மேலே