தீயவர் நற்சொல் ஏற்கார் - நீதி வெண்பா 80

நேரிசை வெண்பா

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்
தன்மநூல் புக்காலும் தங்காதே – சன்மமெலும்(பு)
உண்டு சமிக்கும்நாய் ஊணாவின் நெய்யதனை
உண்டு சமிக்குமோ ஓது 80

- நீதி வெண்பா

பொருளுரை:

பாவமே நிறையப் பெற்ற சரீரத்தையுடைய பொல்லாதோருடைய காதில், தரும சாஸ்திரம் உபதேசிக்கப் பட்டாலும் (மனத்தில்) தங்காது; தோலையும் எலும்பையும் உண்டு திருப்தியடையும் நாய் பசுநெய் கலந்த உணவை உண்டு திருப்தியடையுமோ சொல்!.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Aug-21, 6:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே