காதல் கைதி

உன் கண்களால்
என்னை கைது செய்து
உன் மனதில்
என்னை கைதியாக்கி
சிறை வைத்தாய் ...!!!

நான் விசாரணை கைதியா
இல்லை ஆயுள் கைதியா
என்பதை மட்டும்
விரைவில் சொல்லிவிடு..!!

விசாரணை கைதி என்றால்
விலகிக்கொள்கிறேன்
ஆயுள் கைதி என்றால்
அமைதியாக இருக்கிறேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Oct-21, 9:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal kaithi
பார்வை : 131

மேலே