எழுதாத கவிதையில் அவள்

எழுதாத கவிதையில்
அவள் அழகெல்லாம்
பால்வெளி அண்டமாய்
பிரமிப்பூட்டும்

இமைக்க மறந்த
நேரங்களில் எல்லாம்
உதடுகள் தேடும்
குழந்தை முத்தமாய்
அவள் மென்மை
சிலிர்ப்பூட்டும்

நெஞ்சின் சுமை
கூடும் வேளை
அவளின்
விரியாத மலர்கள்
துளிர்விடும் வாசம்
விரல்கள் தீண்டாமலே
மனதை நிறைக்கும்

கொஞ்சிப்பேச
தூண்டும் குழைந்து
பேசிட பணிக்கும்
அவளின்
குழந்தைத்தனம்
எடுப்பார் கைபிள்ளை
போல சிரித்து மகிழும்

வெள்ளைத்தாளில்
நிறைந்து வழியும்
கவிதையாய் அவள்
புன்னகை வானவில்
மழைத்தூறலோடு
நெஞ்சம் நனைக்கின்ற
நல்ல நேரம் இன்று...

எழுதியவர் : மேகலை (15-Oct-21, 5:02 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 344

மேலே