உலகத் தந்தை - 4

என் தேவனே என் தேவனே
வந்தேன் உமைப் பாட - யாரும்
சொல்லாத வரிகள் சொல்லிப் பாடுவேன்
கல்லான இதயமும் கரைந்திடும்
பொல்லாத உலகம் ஆனது
நீர் நன்றாய் படைத்த உலகம்
வம்பாய்த்தான் போனது
கல்லாய் போன மனிதர்கள் இன்று
நன்றாய்தான் வாழ்கிறார்கள்
கொடுமையின் இதயத்தோடே
நல்லோர் பலரை வீழ்த்துகின்ற்னர்
நீர் படைத்த மாந்தர் இன்று வேஷம் மாறி
நீசனாகிப் போனார்கள்
யார் படைத்தது இந்த மாந்தரை
மிக மோசமான படைப்பு என்று
அவப்பெயர் கேட்க்கிறீர்

எழுதியவர் : சுந்தர் (5-Nov-21, 5:01 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 48

மேலே