கவிதை 🌷
****************
தலைப்பு என்பது
என் கவிதைக்கு மட்டுமில்லை...
உன் சேலைக்கும்தான்...
நீ💗
சேலையில் வந்தால்,
தலைப்புடன் கூடிய
கவிதையாகிவிடுகிறாய்...
ஆனால்,
நீ💚
ஒரு குறும்புக்காரி,
அடுத்த நாள்
வேண்டுமென்றே,
சுடிதாரில் வருகிறாய்...
"இப்போது
என்னடா சொல்லுவாய்",
என்ற கேலியோடு...💦
கண்ணே...
நீ சேலையில் வந்தால்
கவிதை...💘💕
சுரிதாரில் வந்தால்,
புதுக்கவிதை...!💞
.
✍️கவிதைக்காரன்.