முருங்கைமரப் பட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
முருங்கைவேர்ப் பட்டைக்கு மூடு கபத்தோ(டு)
ஒருங்குறாச் சன்னிசுரம் ஓடும் - அருங்கனக
வட்டைப் பொருமுலையாய் வாய்வொடுவி ஷங்களுமேற்
பட்டைக்குப் போமே பறந்து
- பதார்த்த குண சிந்தாமணி
இம்முருங்கை வேர்ப்பட்டை கபதோடம், சன்னிசுரம், இவற்றையும், வாததோடம், சிலவிடம் இவற்றையும் நீக்கும்