காதல் கண்டேன்

ஆண்: "அழகை கண்டேனே!
ஆசை கொண்டேனே!
கவிதை கண்டேனே!
காதல் கொண்டேனே!

"அழகை கண்டேனே!
ஆசை கொண்டேனே!

@@@@


1. பெண்: உருவை கண்டேனே,
நான் உறக்கம்
கொன்றேனே,
உறவை கண்டேனே
என் உயிரை தந்தேனே ,

ஆண்: காதல் இதுதானா?
கனவு நிஜம்தானா?
களவும் சுகம் தானா?
நீ என் வசம் தானா?

@@@@


பெண் : பார்வை கண்டேனே!
பரிவு கொண்டேனே,
பருவம் கண்டேனே !
பாசம் கொண்டேனே,

பார்வை கண்டேனே!
பரிவு கொண்டேனே,

@@@@


2. ஆண்: இனிமை கண்டேனே,
நான் இன்பம்
கொண்டேனே,
தயக்கம் துறந்தேனே,
நான் தணிக்க
துணிந்தேனே,

பெண்: ஆசை நிஜம் தானா?
அன்பு நிலை தானா?
அளிக்க நீ தானா?
களிக்கும் நாள் தானா?

@@@@


ஆ,பெ : காதல் கொண்டோமே,
கனவு கண்டோமே,
சிறகை விரிப்போமே,
இணைந்து பறப்போமே." (1)

-------

எழுதியவர் : (26-Nov-21, 9:57 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 137

மேலே