என்னோடு நீ இருந்தால்

கருவிழியாய் இருப்பாய் என்று நினைத்தேன் ...
கண்ணீரைத் தந்து சென்றாய் .....
மூச்சாய் இருப்பாய் என்று நினைத்தேன்.....
சுவாசத்தை எடுத்து சென்றாய் ....
வார்த்தையாக மாறுவாய் என்று நினைத்தேன் ....
சொற்களை திருடிச் சென்றாய் ...
உயிராக இருப்பாய் என்று நினைத்தேன் ....
இதயத் துடிப்பை நிறுத்திச் சென்றாய் ...
காலம் முழுதும் வாழலாம் என்று நினைத்தேன் ...
கானல் நீராய் காணமல் சென்றாய் ...
ஏமாற்றமே என்றாலும் , இன்னும் எதிர்பார்த்து
நினைக்கிறேன் ," என்னோடு நீ இருந்தால் " ....😥

எழுதியவர் : முத்துக்குமார் (2-Dec-21, 10:59 am)
சேர்த்தது : Muthukumar V
பார்வை : 407

மேலே