நல்லாட்சி தரவு கொச்சகக் கலிப்பா

அன்றொருநாள் வாசலிலே
அன்பொழுக வாக்குறுதி
என்பதனை எமக்கள்ளி
இலவசமாய்த் தந்தவரோ
பின்பொருநாள் பதவிதனைப்
பிடித்தமர்ந்து கொண்டவுடன்
முன்புதிர்த்த மொழிமறந்து
முறைதவறி நடந்தாரே
அவர்போல்
மக்களை மறக்கும் மாந்தரை விடுத்து
மிக்கநல் லொருவரை மிடுக்குடன்
தக்கதாய்த் தெரிந்தால் தான்நல் லாட்சியே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Jan-22, 2:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 57

மேலே