இராகுவின் வாழ்க்கை ஓர் வசந்தம்
இராகுவின் வாழ்க்கை ஓர் வசந்தம்
ஏங்கும் ஏழையர் வாழ்வினிலே
இனிய வசந்தம் வீசிடுமோ?
ஓங்கும் வளரச்சி ஊரெங்கும்
முயர்ந்து ஒளிவிட் டுயர்ந்திடுமோ!
தாங்கு முலகில் தளிர்விட்டு
தாழ்வு முயர்வும் தகர்ந்திடுமோ?
அங்கே வளரும் அறிவுச்சுடர்
அன்பில் கலந்து நின்றிடுமோ?
குன்றின் மேலிட்ட குலவிளக்காய்
கூடியே வாழ்ந்திடும் மாந்தர்கள்
என்றும் இருந்திட இணைத்திட்டால்
இன்பம் விளைந்திட்டால்
நன்றென நினைந்து நம்மவரும்
நடைமுறை ஒன்றும் வகுத்திட்டால்
பொன்னெனக் காணும் வசந்தம்நம்
பூமியில் பூத்திடும் வாழ்க்கையில்!