தமிழோடு ஒரு போட்டித்தேர்வு
முதுகலை வரை
தொலைவழிக்கல்வியில் படித்த
எனக்கு போட்டித் தேர்வு
புதுவித அனுபவம் கொடுத்துச் சென்றது,
தூரமாக இருந்தவைகளை
அருகினில் அறிமுகம் செய்தது
புதிராக இருந்தவைகளின் மேல்
புரிதல்கள் தந்து சென்றது
சங்க இலக்கியங்களை
சட்டைப் பைக்குள் வரச் செய்தது,
தொல்காப்பியம் .கைகளில் தவழ்ந்தது,
நன்னூல் இலக்கண நடை பயிற்றுவித்தது.,
நாற்கவிராசர் அகத்திலும்,
ஐயனாரிதனார் புறத்திதுலும்,
நண்பர்கள் ஆனார்கள்.,
காப்பியக் கடலில் குளிக்க முடிந்தது
கோவலனை கண்டிக்க முடியாத
கண்ணகி மதுரையை எரித்ததற்கு
இளங்கோவடிகளிடம் கண்டனம் தெரிவித்தேன்.,
எட்டு பெண்களை மணந்தவனை
காப்பியத்தலைவன் ஆக்கிய
திருத்தக்கதேவரிடம் சட்டம் பேசினேன் .,
சித்தர்களின் சீரிய கொடையினை
மனமுவந்து பாராட்டினேன் ,
பக்தியை விரும்பாத நானும்
பக்தி இலக்கியங்களின் மேல் பக்தி ஆனேன்,
சங்ககால நண்பர்களைக் கண்டு
பரவசமாகி நட்பின் மேல் காதல் கொண்டேன்,
பதினெண்கீழ் கணக்கின் மேல் கருத்தை நிறுத்தினேன்,
குறட்பாவில் என்னை மறந்து லயித்தேன் ,
சர்ச்சையில் சிக்கிய நெடுநெல்வாடையை
கண்டு நலம் விசாரித்தேன் ,
தமிழ்த்தாத்தா எனக்கு தாத்தா ஆனார்
கால்டுவெல் , ஜி யூ போப் அவர்களின்
தமிழ் பணிக்கு சால்வை போட்டு salute அடித்தேன்
தமிழ் என் மனதை நிறைத்து நிற்க
மு.வ வின் இலக்கியவரலாரை
மார்போடு அணைத்துக்கொண்டு உறங்கினேன் ,
என் கனவினை திறந்து
கவிதை கற்று கொடுத்தனர்
பாரதியும், தமிழன்பனும் ...
அன்புடன் ஆர்கே ..