பிரதிபலிப்பு

கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்.
அங்கு
நான் நானாகத் தெரியவில்லை.
அம்மாவின் கனவுகளின்
அப்பாவின் ஏக்கங்களின்
சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்புகளின்
சொந்தபந்தங்களின் எதிர்ப்புகளின்
சமுதாயத்தின் தாக்கங்களின்
நண்பர்களின் சந்தோஷங்களின்
கணவன்மார்களின் கடுப்புகளின்
மனைவிமார்களின் அதிகாரங்களின்
பிள்ளைகளின் அவசரங்களின்
பிரதிபலிப்பாய்த்தான் தெரிந்தேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-May-22, 10:30 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 277

மேலே