செம்மொழி நம்மொழி தமிழ்மொழியை

அகத்தியன் இயற்றினான் பொதிகை
இளந்தென்றலில் செம்மொழி
நம்மொழி தமிழ்மொழியை
அகர முதலாம் எழுத்து இயம்பினான்
தமிழ்க்குறள் பெருந்தகை
வள்ளுவன்
தகர டப்பா தாள வாத்தியக் கச்சேரியோ
தகைமிகு எழுத்து
அகர உகர மகர ஓம்கார
தமிழ்வேளே நீகூறு !

அ உ ம சங்கமம் ஓம்
தமிழவேள் முருகன்

பாவினம்
எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-22, 10:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே