அன்னப்பறவை
மனிதனின் வாழ்க்கையென்பது
இன்ப துன்பங்களின் கலவையே...!!
அன்னப்பறவை
பாலும் தண்ணீரும்
கலந்த கலைவையில்
பாலை மட்டும்
தனியாக பிரித்து
பருகி செல்லும்...!!
மனிதனே உன்னால்
இன்பத்தை மட்டும்
தனியாக பிரித்து
அன்னப்பறவையை போல்
வாழ்ந்து விட முடியாது...!!
--கோவை சுபா