கால் சொன்ன பாடம்
வலது காலில் அடிபட்டு
வலியில் சோர்ந்து போனது
நடப்பதற்கும் சிரமப்பட்டு நின்றது
செய்தி அறிந்த,
இடது கால் துடித்து போய் ஆறுதல் கூறியது.,
வாஞ்சையாய் வலி பற்றி விசாரித்தது,
உன் பாரத்தையும்
நானே தாங்கிக் கொள்கிறேன்
என்று உறுதியளித்தது.,
அன்பால் காயத்திற்கு
உபாயம் செய்தது.,
ஆணவம் இன்றி
அனைத்தையும் ஏற்று கொண்டது
வலதுகால்
இணை பிரியாத நண்பர்களின்
புரிதல் கண்டு வியந்து நின்றேன்
கால்களிடையே பேதமில்லை
நம்மிடம் ?
அன்புடன் ஆர்கே..