மின்னலொன்றை வீசுகிறாய் காதல் முகிலாய்

தென்னங் கீற்று இடைவெளி தன்னில்
தென்றல் வந்து ஆடிடும் காலையில்
புன்னகையில் தென்னை மீதினில் சாய்ந்து
மின்னலொன்றை வீசுகிறாய் காதல் முகிலாய் !


தென்னை இளங்கீற் றுபசுமை தன்னிலே
தென்றல் விளையாடி டும்கால லைப்போதில்
மின்னலொன்றை வீசுகிறாய் காதல் கருமுகிலாய்
தென்னையில் புன்னகையில் சாய்ந்து

------முறையே விருத்தம் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-22, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே