அழகான தருணம்..//
இளநெஞ்சங்கள் இரண்டும்
இதமாய் நடைபோடு..//
வீதியோர்
அங்காடியில் அமர்ந்து..//
குடுவையில் இளஞ்சூட்டோடு
தேனீரை பருகியது..//
நடைப்பழகும் குழந்தைப்போல்
கைகளும் பின்னிக்கொண்டது..//
சாலையோரம் மரங்களிலிருந்து
தூவும் மழையில் நனைந்தது..//
இதமான நேரங்களில்
இன்பங்கள் கூட்டும்..//
அழகான தருணம்
அவளுடன் நடக்கையில் மட்டும்..//