மரணம்.
கை பிடித்தத் தாரம்போல்
காலமெல்லாம் துணை வந்த
வாழ்வாதாரம்
அறுபதில் அறுந்தபோது
கடைசி வரை கூட வர
முதுமை துணை நின்றதை
மறப்பேனோ!
மண்ணின் காட்சிகள்
விழித்திரையில்
மறையத் தொடங்கியதும்
மனசின் பார்வை
மாயவனை நாடியதை
மறப்பேனோ!
அல்லல்பட்டு அநாதையாய்
ஆன என்னை
பேதங்கள் பாராது
அன்புடன் அரவணைத்து
இழந்த பதவிக்காக
சிவலோகப் பதவியை
வாங்கித் தர
நீ முயல்வதை
மறப்பேனோ!
பக்குவமானது மனம்
மனிதனை மரணம் வெல்லும்
வாழ்க்கையை நேசிக்க
வழியில்லாதபோது
மரண நேசிப்பும்
மரியாதை பெறும்.