கிராமத்து பைங்கிளி

நதியோரம் நடந்துவந்தாள் வஞ்சிக்கொடி இடையாள்
இடையில் தாங்கிவந்தாள் அவள் குடநீரு
நீராடி அவள் அணிந்த ஈரச்சிற்றாடை
பொங்கும் அவள் அழகைச் சித்திரிக்க
நங்கை அவளை யறியாது ரம்பையைப்போல்
அசைந்து ஆடி வந்தாள் தோகை மயில்போல
இவள் வடிவழகில் மயங்கியதோ காவிரியாறு
ஓடுவதை கொஞ்சம் நிறுத்தி இவளோடு
தானும் ஆடி வந்தது ஆறு
நடன சிகாமணியாய் மாறி முடிவில்
இவள் ஆட்டத்திற்கு ஈடில்லை என்று
வெட்கி தலை குனிந்து ஓடியதே காவேரி
கிராமத்து பைங்கிளி இவள் இதை
யாதும் அறியாது இடுப்பின் குடநீரு
கொஞ்சமும் தெளும்பாது இயற்கையாய் ஒய்யாரமாய்
நடந்தே வந்த அடைந்தாள் இல்லம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Aug-22, 2:29 pm)
பார்வை : 67

மேலே