522 என்றும் பெரியோர் பணிந்தே சிறப்பர் – பன்னெறி 2

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்
காமரம் வளைதல்போற் கலையு ணர்ந்திடும்
தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமர ரெவரையும் பணிந்தி டார்களே. 2

– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தேன் நிறைந்த சுவைமிக்க பலவாய் அடர்ந்து அமைந்துள்ள சோலைமரங்கள் தாமாகவே வளையும் தன்மைபோல் எல்லாக் கலையும் கற்றுணர்ந்த நல்மனச் சான்றோர் யாவரையும் தொழுவர். அறிவில்லாத் தாழ்நிலையுடையோர் எவரையும் பணியார்.

செறிந்து-அடர்ந்து. கா-சோலை. தூ-நன்மை. பாமரர்-அறிவிலார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Aug-22, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே