தாய்ப்பாசம்

நேரிசை ஆசிரியப்பாக்கள்


புதுக்கோட்டை ஜில்லா ஆலங் குடிமற
மடக்கி கம்பர் வீதியில் குடும்பம்
மூன்றுஆண் இரண்டு பெண்மக் களையும்
ஈன்றவள் ஜெயலட் சுமியாம் கணவனை
இழந்து பின்னே ஆண்பிள்ளை களெல்லாம்
நோயால் மாள வாடினாள் கிழவி
நிலபுலன் களைவிற்ற பணத்துடன் சேர்ந்தாள்
சென்னை மகள்களிடம் எழுபது வயதில்.
பத்து ஆண்டுகள் வரைகைக் காசை
அவ்வப் போது பெண்களுக்கு கொடுத்துத
விவந்தாள் எண்பது வயது மூதாட்டி
பணமெல்லாம் கரைய பெண்கள் பெற்ற
தாயைக் காரி லேற்றிக் கொண்டு
வந்து சேர்ந்தார் சொந்தவூர் மறமடக்கி
மகனுடை வயிற்றுப் பேரனாம் திருப்பதி
யுடைய பூட்டிய குடிலின் முன்னே
சாக்கடை அருகில் திண்ணை மேலே
சாய்த்து விட்டு சிட்டாய்
காரிலே பறந்தார் சென்னைக்கு உடனே


பூட்டிய வீட்டின் முன்னே மூதாட்டி
பட்டினி கிடக்க போவோ ரெல்லாம்
கண்ணுற்று ஒருசிலர் உணவு தந்து
கேட்க மூதாட்டி விவரம் சொன்னாள்
பேரன் திருப்பதி யுமந்த ஊரைக்
காலிசெய்து வெளியூர் போய்விட்ட படியால்
கிராம மக்களும் இறக்கப் பட்டுப்
போலிசில் புகார்செய் திடவே போலீஸ்
சென்னை சென்று ஓடுகாலி மகள்களை
அழைத்து வந்து எச்சரித்து
அவர்களுடன் அனுப்பி வைத்தார் பாருமே


தினமலர் பரபரப் பெனச்சொல்லி வெளியிட்டார்
பரிதா பத்தையும் பரபரப்
பெனச்சொல்லல் தவறென் றறியா தேனோ

எழுதியவர் : பழனி ராஜன் (18-Sep-22, 9:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே