காதல் வியூகம்

பாரத போரில்
பத்ம வியூகத்தை
உடைத்து போரிட்ட
அபிமன்யு போல்....

நானும் காதல் போரில்
வியூகங்களை உடைத்து
உந்தன் உள்ளத்தில்
நுழைந்து விட்டேன்.

பாரத போரில்
எதிரிகளை வீழ்த்தி
"பத்ம வியூகத்தை" விடுத்து
வெளியேற வழி தெரியாமல்
அபிமன்யு தவித்தான்.

ஆனால்...
நானோ
"காதல் வியூகத்தை" விடுத்து
வெளியேற முயற்சி
செய்யவில்லை
உனக்குள்ளே நான்
இருக்கவே துடிக்கிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Sep-22, 11:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal viyuukam
பார்வை : 209

மேலே