நினைவலைகள்

நித்தம் நித்தம்
என் மனமென்னும் கடலில்
நினைவலைகள் பலதும்
அலை கடல் அலையென
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க

என் இனியவளே
உந்தன் நினைவலைகள்
வந்தவுடன் மற்றவை யாவும்
வந்த சுவடுகள் தெரியாமல்
அமைதியாக பின்னுக்கு
சென்று விடுகின்றதே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Oct-22, 6:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ninaivalaigal
பார்வை : 308

மேலே