இதையும் அவலோகிடம் ’கலிவிருத்தம்’ என்றுதான் காட்டுகிறது

கலிவிருத்தம்

இளந் வீ எழில் பொழு
இள கள் இளந் டிட
வளர் நிலா வா முகம்
இளை நீ இது இல்!

இதையும் அவலோகிடம் ’கலிவிருத்தம்’ என்றுதான் காட்டுகிறது!

எந்த அளவு நம்பிக்கைக்கு உரியதாக எடுத்துக் கொள்ளலாம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

தகுந்த இலக்கண வழிகாட்டலின்படி எழுதுவதே சிறப்பாகும்.

கலிவிருத்தம் பலவகை வாய்பாடுகளில் இலக்கியங்களிலும் (இராமாயணம், வில்லி பாரதம், மற்றுமுள்ள புராணங்கள் கந்த புராணம், திருவிளையாடல் புராணம், சீறாப் புராணம், தேம்பாவணி, குசேலோபாக்கியானம்) தேவாரப் பதிக்ங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, ’தேம்பாவணி’ யிலிருந்து ஒரு பாடல்:

தாவீது மன்னன் சிறப்பு
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அன்னமா திருநகர் அகத்து டற்குயிர்
என்ன,மா தாவிதன் இனிதில் வீற்றிருந்(து),
ஒன்னலார் வெருஉற, உவந்து பாவலர்
சொன்னபா நிகரும்மேல் துளங்கி னானரோ! 1 வளன் சனித்த படலம், தேம்பாவணி

பொருளுரை: அத்தகைய பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு உயிர் போல, பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்து, பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும் மேலாக விளங்கினான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-22, 1:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே