இலையுடன் சாம்பலும்

இன்னிசை வெண்பா

யானையும் மானும் கழுதையும் மாடும்
அரவமும் ஆடும் புலியும் நாயும்
குரங்கும் மயிலும் முதலையும் ஆமையும்
தெய்வமாய் இங்கே தொழ

குதிரையும் காகமும் பன்றி குயிலும்
மயிலும் சிலந்தியும் மீனும் எறும்பும்
மனித உருவுடன் சேர்ந்த மிருகமும்
தெய்வமாய் இங்கே தொழ

கதிரவன் காற்றும் நெருப்பும் மணலும்
அலையும் அளையும் மழையும் பொருள்களும்
கோமியம் சாணி உணவு இனிப்புடன்
பானகம் யாவும் இறை

மின்னல் இடியும் அருவியும் ஆழியும்
நூலும் துணியும் தந்தமும் காகிதம்
தங்கமும் தாமிரம் பித்தளை எஃகும்
கடவுளாம் இங்குமே காண்.

மரமும் செடியும் கொடியுடன் பூவும்
இலையுடன் சாம்பலும் வாசனை தூளும்
அரியவை யாவும் இறையாய் நினைப்பது
ஆதித் தமிழர் தொழல்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Oct-22, 8:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே