குருவிக் குஞ்சு பறந்திருச்சு - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
குருவிக் குஞ்சு பறந்திருச்சு
..கூட்டை விட்டுக் கலைஞ்சிருச்சு;
அருவிப் பக்கம் போயிருச்சு
..அலையில் மீனைப் பிடிச்சிருச்சு!
வரும்நே ரந்தான் பார்த்திருக்கேன்
..வந்த பின்னே கொஞ்சிடுவேன்;
திரும்பப் போக விடமாட்டேன்
..தேடித் தீனி கொடுப்பேனே!
- வ.க.கன்னியப்பன்