அவள் பிரமனின் சிறப்பு படைப்பு

மஞ்ச பூசவில்லை ஆனாலும் ஒருபொலிவு
அவள் பால் நிலா முகத்தில் மஞ்சள் பூசியதுபோல்
மை ஏதும் தீட்டா கண்கள்
அவள் கண்கள் ஆனால் மை இட்டதுபோல் காட்சி
மல்லிகைப்பூ சூடவில்லை ஆனால் அவள்
கார்மேகக் கூந்தலில் மல்லிகை வாசம்
வண்ணம் ஏதும் பூசா அவள் அதரம்
தேன் சிந்தும் செவ்வந்திப் பூப்போல் காட்சி
ஆடி வரும் அவள் அழகு கண்டு
கோல மயிலும் வெட்கி ஆடாது நின்றது
பிரமனின் ஓர் சிறப்பு படைப்போ இவள்
பொங்கும் இயற்கை எழிலில் இப்படி
என் மனத்தைக் கிறங்க வைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Nov-22, 8:03 pm)
பார்வை : 220

மேலே