நிழல் ஒன்று
நிழல் ஒன்று
சூரியன்
கொதி நிலையில்
கிழக்கிலிருந்து
மேற்காக நகர்ந்து
கொண்டிருக்க
அடர் மரத்தின்
நிழல் ஒன்று
தாய்க்கு வாகாய்
நகர்ந்து செல்ல
சோம்பல்பட்டு
அடம் பிடித்து
ஓடுகிறது
காலடியில்
வந்து நில் ..!
மரம் சொன்ன
அறிவுரையை
அலட்சியம்
செய்து நின்றது
கதிரின் வேகத்தை
அரை நாழிகை
கூட தாக்கு
பிடிக்க முடியாமல்
ஓடி வந்து
மரத்தின் பின்புறமாய்
பயந்து போய்
நிற்கின்றது