182 உழைப்பவரை வருத்துவோர் உயர்ந்தோர் ஆகார் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 9

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

என்றுமெய் வருந்த வேலை
= இயற்றுவோர்க் குயர்ந்தோர் அற்பப்
பொன்றனை ஈவர் செட்டுப்
= புரிகின்ற வணிக ரென்ன
ஒன்றுகொண் டொன்றை யீவோர்
= உழையரில் தாமு யர்ந்தோர்
என்றுகொள் எண்ணம் திண்ணம்
= என்னலெவ் வண்ணம் அம்மா. 9

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”எந்நாளிலும் உடல் வருந்த வேலை செய்பவர்களுக்கு வேலை வாங்கும் வசதி உள்ளவர்கள் குறைந்த கூலி கொடுக்கின்றனர். சிக்கனம் கருத்திற் கொண்டு வியாபாரிகளைப் போல் ஒரு பயனைப் பெற்றுக்கொண்டு இன்னொரு உதவி செய்வோர் வேலையாட்களை விட தாம் உயர்ந்தோர் என்று கொள்ளும் எண்ணம் உறுதி என்பது எப்படிப் பொருந்தும்?” என்கிறார் இப்பாடலாசிரியர்.

செட்டு – சிக்கனம், உழையர் - வேலை செய்வோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 10:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே