காய்கறிய பத்தி பாட வந்தேன்
🍅🍅 "உடம்பு தகதகனு மின்ன தக்காளி !
காரசாரமா வெங்காயம் !
பச்சை பசேல்னு மிளகு கார பச்சைமிளகாய் !
குண்டு குண்டு கத்திரிக்காய் !
புசுபுசுனு பூசிணிக்காய் !
வழவழனு வாழைக்காய் !
ரேபிட் சாப்பிடும் கேரட் !
ரூட் இருக்கும் பீட்ரூட் !
பின்னம் போடும் பீன்ஸ் !
கொடையா கொடையா குடைமிளகாய் !
கொத்தா கொத்தா கொத்தவரங்காய் !
மூலம் குறைய முள்ளங்கி !
உருட்டி நிக்கும் உருளைக்கிழங்கு !
கண்ணு பளிச்சிட வெண்டைக்காய் !
சுண்ட சுண்ட சுண்டக்காய் !
பாவமான பாவக்காய் !
உடம்பு கனத்த சுருக்கும் சுரைக்காய் !
வெள்ளி போல மின்ன வெள்ளரிக்காய் !
முறுக்கி நிக்கும் முருங்கக்காய் !
முட்டையா மொழு மொழுனு முட்டைக்கோஸ் !
சர்க்கரையைக் குறைக்கும் அவரைக்காய் !
தேன் போல தேங்காய் !
பித்தம் குறைய நார்த்தங்காய் !
நல்லா வாழ நெல்லிக்காய் !
சிறுநீர் பிரிய பரங்கிக்காய் !
மூளை பலம் பெற பீர்க்கங்காய் !
மாமாவும் மாமியும் சாப்பிடும் மாங்காய் !
மூலம் நலமாக கருணைக்கிழங்கு !"🍅🍅