தழுவாத கரங்கள்

தழுவாத கரங்கள் .!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

விதையாக என்னுள்ளே விழுந்தாயே அன்று /
விருட்சமென இதயமெலாம் விரிந்தாயே வென்று /

பதைக்கின்ற நெஞ்சினையே பதமாகத் தேற்றி /
கதைத்தாயே எழுபிறவிக் கதைகளெலாம் நீட்டி /

ஊடலுமே காதலரின் ஊடாலே நுழைய/
தேடலுக்குப் பின்னாலே தேறிடுமே நேசம் /

என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் என்னவளின் முகத்தில் /
என்றென்றும் விலகாது என்நேசம் எளிதில் /

தழுவாத கரங்களுமே தவிக்காதோ உனக்காய் /
எழுதாத காவியமே ஏந்திழையே வருவாய் !!

- யாதுமறியான்.

எழுதியவர் : .-யாதுமறியான். (22-Feb-23, 11:34 am)
பார்வை : 190

மேலே