589 அறிவாற்றல் அன்பாம் ஆண்டவனைத் தொழு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 47

தரவு கொச்சகக் கலிப்பா

ஒன்றாகி மூன்றாகி யுயிர்த்துணையாய் ஒப்பிலதாய்
நன்றாகி நின்றதனி நாயகனைத் துதிமனமே
நாயகனைத் துதிபுரியின் நன்மையுறுந் தின்மையறுந்
தீயகம்போம் எய்துறுங்காண் தேவர்பெ றும்பேறே. 47

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சமே! ஒப்பில்லா முழுமுதலென ஒன்றாய், தானே விளங்கும் அறிவு, ஆற்றல், அன்பென மூன்றாய், விளக்க விளங்கும் அம்மூன்றும் உடைய உயிர்களுக்கு அவற்றை விளக்கும் உயிர்த் துணையாய், உடனாய் நின்றருளும் சிறந்த காதலம் தலைவனைப் போற்றுவாயாக.

அத்தலைவனைப் போற்றின் என்றும் மாறா இன்பமாம் நன்மை வந்தெய்தும், அதற்கு இடையூறாகிய தீமை அற்றொழியும். நிரயத்துன்பம் அகலும். வீட்டின்பம் பெருகும். அவ்வின்பமே தெய்வத்தன்மை எய்தினார் பெறும் பேறாகும்.

தனிநாயகன் - சிறந்த காதலம் தலைவன். தீயகம் - நிரயம்; நரகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-23, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே