ஆள்கின்றனர் மனதை

ஆளாக்கி விட்டவர்கள்
ஆவியாய் பறந்தார்கள்
ஆண்டுகள் கடந்தாலும்
ஆள்கின்றனர் மனதை !
அமுதோடு அன்பையும்
அளவின்றி ஊட்டியவர்கள்
அங்கமெலாம் ஆக்கிரமித்து
ஆயுள்வரை வழிநடத்துவர் !

அரவணைத்து காத்தவர்கள்
மண்ணில் மறைந்தாலும்
உள்ளத்தில் நிலைத்தனர் !
அவர்களின்றி நாமில்லை
மறப்பதும் ஒதுக்குவதும்
மனிதனே நியாயமில்லை !
வாழும்வரை எந்நாளும்
போற்றிடு வணங்கிடு !


பழனி குமார்
24.04.2023

எழுதியவர் : பழனி குமார் (24-Apr-23, 8:05 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 65

மேலே